உணவை வீணடித்தால் அபராதம்; சவுதி அரேபியா அதிரடி முடிவு

திங்கள், 9 ஜூலை 2018 (18:16 IST)
சவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
 
சவுது அரேபியாவில் தினமும் தயார் செய்யப்படும் உணவுகளில் சுமார் 40% வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகளவில் உணவுகளை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து சவுதி அரேபியா அரசு அதிரடியான முடிவை எடுத்துள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவிற்கும் ஆயிடம் ரியால் அபராம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம், உணவு பதப்படுத்தும் நிலையம், உணவங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிடவைகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களின் உரிமை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்