மைக்ரோசாப்ட் குழுமத்தின் தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம்!

வியாழன், 17 ஜூன் 2021 (12:45 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக சத்யா நாதெள்ளா நியமிக்கப் பட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை கடந்த 1975 ஆம் ஆண்டு தனது நண்பர் பவுல் ஜிஆலனோடு இணைந்து தொடங்கினார் பில்கேட்ஸ். இதன் பங்குகளை வைத்திருந்தது மூலம் பில்கேட்ஸ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய பில்கேட்ஸ் இயக்குனர்கள் குழுவிலும் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியில் மட்டும் இருந்து வந்தார்.இந்நிலையில் இப்போது இயக்குனர்கள் குழுவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்தின் புதிய தலைவராக சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்