எரிமலை எப்படி வெடித்தது? வெளியான சேட்டிலைட் புகைப்படம்

சனி, 5 ஜனவரி 2019 (18:06 IST)
இந்தோனேசியாவை புரட்டிப் போட்ட டிசம்பர் 22 ஆம் தேதி சுனாமிக்கு காரணாமான அனாக் க்ராகட்டாவ் என்ற கடலடி எரிமலை வெடிப்பின் பிரும்மாண்டத்தைக் காட்டும் சிறந்த செயற்கைகோள் ஆப்டிக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
 
சுண்டா ஜலசந்தியில் நிலவிய மோசமான வானிலையால், ஸ்கைசாட், டோவ் செயற்கைக் கோள்களால் புகை, மேகமூட்டத்தின் நடுவே பூமியை காண்பது சிரமமாக இருந்தது.
 
புவியை நம் கண்கள் காணும் அதே வித ஒளியில் காண்பவை இந்த செயற்கைக் கோள்கள். இதனிடையே மேக மூட்டத்தின் நடுவே இருந்த சிறு இடைவெளி மூலம் அந்த செயற்கைகோள் புகைப்படங்கள் எடுத்திருக்கிறது.
 
சான் ஃப்ரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்ட ப்ளானட் நிறுவனம் இந்த செயற்கோள்களை இயக்குகிறது. இந்த எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஜாவா மற்றும் சுமத்ரா கடற்பகுதியில் ஏற்பட்ட சுனாமி காரணமாக 430 பேர் இறந்தனர். அயிரக்கணக்கானோர் வேறு இடங்களில் குடிபுகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்