இந்தோனேசியாவில் அடுத்த நிலநடுக்கம் – ரிக்டரில் 5.8

சனி, 29 டிசம்பர் 2018 (07:55 IST)
இந்தோனேசியாவில் கடந்த வாரம் சுனாமி தாக்கியதையடுத்து தற்போது வலிமையான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே கடந்த வாரம் ஏற்பட்ட சுனாமியில் 430க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 1400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சோகத்தில் இருந்தே இன்னும் இந்தோனேசிய மக்கள் இன்னும் மீளாத சூழ்நிலையில் இப்போது மீண்டும் ஒரு பீதியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று மதியம் இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பாப்புவா மாகாணத்தில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகிய இந்த வலுவான நிலநடுக்கத்தின் ஆழம் 55 கிலோ மீட்டர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்ததாகவும் தெரிகிறது. ஆனால் இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமியைத் தோற்றுவிக்கும் சக்தி இல்லை என்றும் அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்