ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகமான பனிப்பொழிவால் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு பலர் இறந்து போகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான நீலம் பள்ளதாக்கு வரலாறு காணாத பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இதனால் ஏற்படும் பனிச்சரிவால் இதுவரை 100 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி சமீனா பீபி சிக்கிக் கொண்டார். பாகிஸ்தான் பேரிடர் மீட்பு ப்டையின் உதவியுடன் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில் அந்த பெண் கண்டெடுக்கப்பட்டார். பனிக்கட்டிகள் விழுந்து கால் உடைந்த நிலையில் குளிர் தாளாமல் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிறுமி சமீனா.