கரடியை சாட்சியாக வைத்து நடந்த திருமணம்!!

வியாழன், 3 நவம்பர் 2016 (14:48 IST)
ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.


 
 
அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
 
சுற்றிலும் இயற்கையான சூழலுக்கு நடுவில் பூங்கொத்துகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தோரணத்தின் நடுவில் ஸ்டீபனை சாட்சியாக வைத்து டெனிஸ், நிலியா மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்