உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்: புதின் அறிவிப்பால் டிரம்ப் அதிருப்தி..!

Mahendran

சனி, 13 செப்டம்பர் 2025 (09:40 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, இரு தரப்பினரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக திடீரென அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
போரை நிறுத்தவும், அமைதியை நிலைநாட்டவும், ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர். பல கட்டங்களாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக சென்று கொண்டிருந்ததாக கருதப்பட்டது. ஆனால், தற்போதைய சூழல் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அதிபர் புதின் நேரடியாக தெரிவிக்கவில்லை. "அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என்று எதிர்பார்க்க முடியாது," என்று மட்டும் அவர் கூறியுள்ளார். இரு தரப்பினரும் தொடர்ந்து மாறி மாறி தாக்கி வருவதால், பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கை தகர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த முயற்சி எந்தவொரு தீர்வையும் எட்டவில்லை. இதனால் டிரம்ப் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்