அதிபர் அதிகாரத்தை செயலரிடம் ஒப்படைக்கிறார் புதின்: என்ன காரணம்!
செவ்வாய், 3 மே 2022 (14:55 IST)
ரஷ்ய அதிபர் புதின் தனது அதிபர் அதிகாரத்தை செயலரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ரஷ்ய அதிபர் புடின் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்
இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு செல்லும் போதும், அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை முடியும் வரை தனது அதிபர் அதிகாரத்தை ரஷ்ய பாதுகாப்பு கருதி செயலரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தற்போது உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சிகிச்சையில் இருக்கும்போது அவருடைய செயலர் தான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது