20 வருடங்களாக வீட்டுவேலை செய்த மனைவிக்கு ரூ.1.75 கோடி; நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வியாழன், 9 மார்ச் 2023 (12:36 IST)
20 வருடங்களாக வீட்டு வேலை செய்த மனைவிக்கு கணவன் ரூபாய் 1.75 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 20 வருடங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை வீட்டு வேலைக்கு செய்வதற்காக மட்டுமே தனது கணவர் திருமணம் செய்து கொண்டார் என்றும் தனக்கு வேறு எந்த சலுகைகளையும் அவர் தரவில்லை என்றும் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்
 
இவானா என்ற பெண் தொடந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 20 வருட காலமாக கணவரின் வீட்டில் தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்த மனைவிக்கு ரூபாய் 1.75 கோடி கணவர் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு விவாகரத்தும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்