எரிமலை மண்ணில் வளரும் ரோஜா: ரூ.2,60,000 விலையிலும் அமோக விற்பனை!!

சனி, 18 மார்ச் 2017 (11:03 IST)
லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை உருவாக்கியிருக்கிறது. 


 
 
இவை 100 சதவீதம் இயற்கையான ரோஜா மலர்கள் இவை. இந்த ரோஜா செடிக்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை.  
 
இதன் சிறப்பம்சம் என்னவெனில் 3 ஆண்டுகள் வாடாமல் ஒரு கண்ணாடிக் குடுவைக் குள் அப்படியே இருக்கும். 
 
சுமார் 30 நிறங்களில் ரோஜாக்கள் கிடைக்கின்றன. ஆனால் விலை மிகவும் அதிகம். ரூ.13,000-ல் இருந்து 2,60,000 ரூபாய் வரை ரோஜாக்களின் வகைகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த மலர்கள் வாடாமல் இருப்பதற்கான காரணம், கனிம வளம் நிறைந்த எரிமலை மண் என கூறப்படுகிறது. 
 
ஈக்வடாரில் உள்ள எரிமலை மண் ரோஜா இதழ்களை, மிக உறுதியாக, அதாவது சாதாரன ரோஜா இதழ்களைவிட 10 மடங்கு தடிமனாகவும் 5 மடங்கு பெரிதாகவும் பூக்க வைக்கின்றன.
 
இந்த வாடாத ரோஜாகளுக்கு Forever Rose என்று பெயரிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்