வாயுத் தொல்லைக்கு முடிவு – விதவிதமான பிளேவரில் மாத்திரை !

புதன், 26 ஜூன் 2019 (15:23 IST)
வாயுத்தொல்லையால் அவதிப்படும் பலருக்கும் நிம்மதி அளிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒரு புதிய மாத்திரையைக் கண்டு பிடித்துள்ளார்.

மோசமான உணவுப்பழக்க வழக்கத்தாலும், செரிமான மண்டலத்தாலும் பலருக்கும் வாய்த்தொல்லை உருவாகி வருகிறது. இதனால் பொது இடங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் ஏற்படும். ஒரு விருந்திலோ, ஒரு அலுவலக கூட்டத்திலோ சுற்றி 100 பேர் இருக்கும் இடத்தில் ஒருவருக்கு இருக்கும் வாயுத்தொல்லையால் சுற்றி இருப்பவர் அனைவரும் அதிருப்தியடைஅய நேரலாம்.

இந்த பிரச்சனைகளைத் தீர்க்கவே பிரெஞ்ச் நாட்டு மருந்து நிறுவனம் மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரைகளை உண்டால் வாயு வெளியேறும் போது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு மல்லிகைப் பூ மற்றும் சாக்லேட் பிளேவரில் நறுமனம் வருமாறும் இந்த மாத்திரைகள் மாற்றும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளில் வேதிப்பொருட்களோ அல்லது உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களோ இல்லை என இதனைக் கண்டுபிடித்த அறிஞரான கிறிஸ்டியன் போனய்ன்செவல் கூறியுள்ளார். 60 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 1500 ரூபாய் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்