காபூல் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் மீட்புப்பணி
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (15:01 IST)
காபூல் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானம் மூலம் மீட்புப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானம் மூலம் மீட்புப்பணி தொடங்கப்பட்டுள்ளது.