6 ஆண்டுகளாக புகுஷிமா அணு உலையில் வெளியேரும் கதிர்வீச்சு: அச்சத்தில் ஜப்பான் மக்கள்!!

திங்கள், 13 மார்ச் 2017 (11:50 IST)
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் அணு உலை வெடித்தது.


 
 
இதனால் அதில் இருந்து கதிர் வீச்சு வெளியாகியது. எனவே புகுஷிமா அணு உலையை சுற்றி தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். 
 
பின்னர் சேதம் அடைந்த அணு உலைகள் சீரமைக்கப்பட்ட பின் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும், இந்த அணு உலை சேதம் அடைந்து 6 வருடம் ஆகினாலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
சேதம் அடைந்து 6 வருடங்களாகியும் இன்னும் அதில் இருந்து அவ்வப்போது கதிர் வீச்சு வெளியாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்