கத்தாருக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடையிலானப் பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் தூதரக உறவைத் துண்டித்து, கத்தாருடனான விமான சேவையை நிறுத்திக் கொண்டன.இதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை கத்தார் சந்தித்தது. அமெரிக்காவின் தலையீட்டால் கத்தாரின் பொருளாதாரப் பின்னடைவு சரிசெய்யப்பட்டு ஓரளவு நிலைமை சரியாகத் தொடங்கி இருந்தது.