உக்ரைன் ராணுவத்திடம் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் 10 ஆண்டுகள் சிறை: புதின் எச்சரிக்கை

ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (11:17 IST)
உக்ரேன் ராணுவத்திடம் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 3 லட்சம் ராணுவ வீரர்களை வேலைக்கு எடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது 
 
இந்த நிலையில் ரஷ்யாவின் போரிட்டு வரும் ராணுவ வீரர்கள், உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் சரணடைந்தால் அவர்கள் பொதுமகள் நடத்தப்படுவார்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்கள் மாறி மாறி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்