உலக போர் மூளப்போகிறது: அனைவரும் நாடு திரும்புங்கள்: புடின்

வியாழன், 13 அக்டோபர் 2016 (17:45 IST)
உலக போர் அச்சத்தால், வெளிநாட்டில் வாழும் ரஷ்ய மக்களை நாடு திரும்புமாறு விளாடிமிர் புடின் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

 
ரஷ்ய நாட்டு நிர்வாக ஊழியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது துறை தொழிலாளர்கள் உடனடியாக வெளிநாட்டு பாடசாலைகளில் படித்து வரும் பிள்ளைகளையும் தாய் நாட்டுக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
ரஷியன் அரசியல் ஆய்வாளர் ஸ்டானிஸ்லாவ் பெல்கோவ்க்ஸ்கி, இந்த முன் ஏற்பாடு நடவடிகைகள் அனைத்தும் உலக போர் அச்சத்தின் காரணமாகவே என கூறினார்.
 
மேலும், விளாடிமிர் புடின் இந்த காரணத்தால் அவர் மேற்கொள்ள இருந்த பிரான்ஸ் சுற்று பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடதக்கது.
 
முன்னதாக, சிரியா போர் பிரச்சனையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் சமரசம் பேசும் என கூறி வந்த புடின், தற்போது ஒருவருக்கொருவர் நலன் கருதி பங்காளிகளாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
 
தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்