பார்ட்டியில் வீலாகர் வேலைக்கு ரூ.17 லட்சம் சம்பளம்: வீலாகர்ன்னா என்ன??
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (15:26 IST)
பார்ட்டி செய்வது தற்போதைய கலாசாரத்தில் சகஜமான ஒன்றாகிவிட்டது. பார்ட்டிகளின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் தனியார் நிறுவனமான ஹென் ஹெவன் பார்ட்டி செய்து சம்பாதிக்க வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனத்தில் தலைமை வீலாகர் இடத்திற்கு இப்போது ஆளைத் தேடி வருகிறது. வீலாகர் என்றால் வீடியோவை பதிவுசெய்து அதை பதிவேற்றம் செய்பவர்.
இந்த பணியில் செய்ய வேண்டியதெல்லாம் ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் பார்ட்டிகளுக்கும் சென்று, அதை பதிவுசெய்து பார்வையாளர்களுக்கு சுவாராஸ்யமாக வழங்க வேண்டியதுதான்.
இதற்கு ஆண்டு சம்பளம் ரூ.17 லட்சம் வழங்கப்படுவதாக ஹென் ஹெவன் நிறுவனம் அறிவித்துள்ளது.