பொருளாதார தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்ட் பிரதமர் லிஸ் டிரஸ்

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:07 IST)
தமது அரசின் தவறான பொருளாதார் தவறுகளுக்கான பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
 

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, இங்கிலாந்து நாட்டிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் புதிதாகப் பிரதமரான லிஸ் டிரஸ், தம் அரசாங்கத்தின் 2 லட்சம் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, விரைவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 5 பில்லியன் பவுண்ட் சேமிக்க முடியும் என இங்கிலாந்து அரசு முடிவெடுத்தது.

அதன்படி, இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படமாட்டாது என்ற தகவல் வெளியானதற்கு, அங்குள்ள அரசு ஊழியர்கள் மற்றும்  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் தெரிவித்தனர். அத்துடன் சொந்தக் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலும் கூட லிஸ் டிரஸுக்குப் பதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த புதிய பிரதமராக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  வரிக்குறைப்பு திட்டம் இடம்பெற்றது. வரி உயர்வு, அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45% வரி உயர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் பொருளாதாரம் பாதிப்பு அடைந்த நிலையில்,  நிதி மந்திரி குவாசியை பதவி நீக்கம் செய்தார் பிரதமர். அதன்பின், புதிய பிரதமராக ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் வரிகுறைப்புகளை திரும்பப் பெற்றார். மேலும், தனது தவறுகளுக்கு பிரதமர் லிஸ்டிரஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

 Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்