இஸ்ரேல் தாக்குதலில் இறந்த கர்ப்பிணி பெண்; உயிருடன் வெளியே வந்த குழந்தை!

Prasanth Karthick

திங்கள், 22 ஏப்ரல் 2024 (11:41 IST)
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன கர்ப்பிணி பெண் பலியான நிலையில் அவரது வயிற்றிலிருந்து குழந்தை உயிருடன் பிறந்துள்ளது.



இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதலாவகே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் அங்கிருந்து தப்பி எகிப்து எல்லை அருகே உள்ள ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால் இஸ்ரேல் தற்போது ரபா மீதும் போர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று இரவில் ரபா நகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 22 பேர் பலியானார்கள். அதில் கர்ப்பிணி பெண்மணியும் அவர் குடும்பமும் பலியாகினர். சப்ரீன் அல் சகானி என்ற என்ற அந்த பெண்மணி 30 வார கர்ப்பமாக இருந்தார்.

அவர் இறந்தபின்பும் அவரது வயிற்றில் சிசு உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அழகான அந்த பெண் குழந்தைக்கு அவசர சிகிச்சைகள் செய்து இன்குபெட்டரில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். போரில் இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்து உயிருடன் குழந்தை பிறந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்