வரலாற்றில் 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலக போர் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரும் போராக கருதப்படுகிறது. இந்த போர் சமயத்தில் வீசப்பட்ட பல வெடிக்குண்டுகள் வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்த நிலையில் அவ்வபோது கட்டுமான பணிகளின் போது பல்வேறு இடங்களில் அவை செயலிழந்த நிலையில் கண்டெடுக்கப்படுவதும், சில சமயங்களில் அரிதா வெடித்து விடும் சம்பவங்களும் நடக்கிறது.
1945ம் ஆண்டில் பிரிட்டன் வீசிய இரண்டாயிரம் கிலோ எடைக்கொண்ட வெடிகுண்டு ஒன்று போலந்தின் பயாஸ்ட் கால்வாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிக்கும் நிலையில் அந்த குண்டு இருந்ததால் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்திய போலந்து கடற்படை வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயற்சி செய்தது. இந்நிலையில் திடீரென வெடிக்குண்டு நீருக்கு அடியிலேயே வெடித்து சிதறியுள்ளது. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என போலந்து தரப்பில் கூறப்பட்டுள்ளது.