உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த சில மாதங்களாக பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ள நிலையில் சில நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்வுகளை அளித்து வரும் நிலையில், சில நாடுகள் இன்னமுமே பொதுமுடக்கத்தை கடுமையாக பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த ஜெஸ்ஸி தகாயமா பெரு நாட்டிற்கு சுற்றுலாவிற்காக அதிக பணம் செலவழித்து சென்றுள்ளார். ஆனால் பெருவில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மச்சு பிச்சு பெருவில் உள்ளது. அதை சுற்றி பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெஸ்ஸி தான் மச்சு பிச்சுவை பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து வந்திருப்பதை சொல்லி அனுமதி கேட்டுள்ளார்.