1 லிட்டர் பெட்ரோல் ரூ.290, டீசல் ரூ.293.. பரிதாபத்தை நோக்கி செல்லும் பாகிஸ்தான்..!

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:28 IST)
இந்தியாவில் கிட்டத்தட்ட 500 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 இன்றைய நிலவரப்படி பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 290 என்றும் ஒரு லிட்டர் டீசல் 293 ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெட்ரோல் விலை 104 மற்றும் டீசல் விலை 94 என விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இரு மடங்கு பாகிஸ்தானில் விலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
பாகிஸ்தானில் கடன் சுமை அதிகரித்து உள்ள நிலையில் அந்நிய செலவாணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் பாகிஸ்தான் உள்ளதால் நாட்டின் விலைவாசி அளவுக்கு அதிகமாக அதிகரித்து உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதே  நிலைமை சென்றால் நடுத்தர மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அப்போது அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்