பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டம்!

புதன், 1 டிசம்பர் 2021 (07:58 IST)
பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பெரு நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 7.5 என்று பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின என்பது குறிப்பிடத்தக்கது
 
நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் இதுவரை வந்த தகவலின் படி சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து சாலையோரங்களில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை அந்நாட்டு அரசின் மீட்பு படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்