ட்விட்டரை பயன்படுத்த விரைவில் கட்டாய கட்டணம்.. அக்டோபர் 17 தேதி முதல் சோதனை

புதன், 18 அக்டோபர் 2023 (09:44 IST)
ட்விட்டரை  பயன்படுத்த விரைவில் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
 
"நாட் எ பாட்" எனப்படும் புதிய சோதனையை ட்விட்டர் தளம் தொடங்கி உள்ளதாகவும், இதன்படி ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம் செலுத்தினால் தான் ட்விட்டரை பார்க்கும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
 
மேலும் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அக்டோபர் 17 தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறை தொடங்கப்பட உள்ளதாகவும், ஆண்டு கட்டணம் செலுத்தாதவர்கள் இனி லைக் மற்றும் கமெண்ட் போட முடியாது என்றும் கூறப்படுகிறது.
 
இந்த புதிய திட்டப்படி ஆண்டு கட்டணம் செலுத்தாதவர்கள்  ட்வீட் போடவோ, புக் மார்க்கிங் செய்யவோ முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது,
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்