சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை ஏற்பு: தமிழக அரசு அறிவிப்பு

சனி, 30 செப்டம்பர் 2023 (16:31 IST)
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு 3Bல் இருந்து 3(A1) TARIFF க்கு மாற்றுவதற்கு 12 KW கீழ் உள்ள நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையாக அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சிறு குறு தொழில் நிறுவனங்களில் 5 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளதை அடுத்து சிறு குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி  அக்.16 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்ட  நிலையில், 1 கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்