அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் டேவிட் ஆலன் டுர்பின்(57), லூயிஸ் அன்னா டுர்பின் (49) என்ற தம்பத்தியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதிலிருந்து 29 வயது வரையிலான 13 குழந்தைகள் உள்ளனர். பெத்த பிள்ளைகள் என்றும் பாராமல் தங்களது 13 குழந்தைகளையும் படுக்கையில் சங்கிலியால் கட்டிப்போட்டு பிணைக்கைதிகள்போல அடைத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த தம்பதியரின் 17 வயது மகள், வீட்டில் இருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டேவிட் ஆலன் டுர்பின், லூயிஸ் அன்னா டுர்பின் தம்பதியரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சித்ரவதை, குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்ற பிள்ளைகளையே பிணைக்கைதிகள் போல பெற்றோரே அடைத்து வைத்து கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.