தெலுங்கானா சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.. குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் உடல்கள்..!

Mahendran

சனி, 1 மார்ச் 2025 (10:20 IST)
தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரையும் அமெரிக்கா மீட்பு படையினர் கடுமையாக போராடிய நிலையில், தற்போது எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் குடிநீர் கால்வாய் அமைக்கப்படுவதற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுரங்கப் பாதைக்குள் எட்டு பேர் சிக்கிக்கொண்டனர்.
 
இதனை அடுத்து மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியை மேற்கொண்டு வந்தனர். இந்த செயல்பாட்டில், 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற மூன்று பேரும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
 
இந்நிலையில், மூன்று பேரும் இயந்திரத்தின் அடியில் சிக்கியதன் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குப் பிறகு, எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், மீதமுள்ள ஆறு பேர் தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்