இப்படி கேட்டா லீவு கொடுக்காம இருக்க முடியுமா? - வீடியோ பாருங்கள்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (17:53 IST)
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் விடுமுறை கடிதத்தை பாடலாக பாடியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன், விடுமுறை கேட்டு தனது தலைமை ஆசியருக்கு பாடல் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருக்கும் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, விடுமுறை விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்களை காமா, புள்ளி உட்பட அனைத்தையும் பாடலாகவே அந்த சிறுவன் பாடியுள்ளான்.
 
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் ஷெஷாத் ராய் அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளாதால், இந்த வீடியோ வைரலாகி விட்டது.
 
மேலும், அந்த மாணவனுக்கு விடுமுறை அளிக்கும்படி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்