இனிதே நடைபெற்ற நடிகை பாவனா-நவீன் திருமணம்; வீடியோ இணைப்பு

திங்கள், 22 ஜனவரி 2018 (12:54 IST)
நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான நவீனுகும் இன்று (திங்கட்கிழமை) திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. பாவனாவின் திருமண நிகழ்வில் பல்வேறு திரைப்பட நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கேரளாவைச் சேர்ந்த பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார். அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஐந்து  ஆண்டுகளாக காதலித்து வரும் நவீன், பாவனா சில காரணங்களால் திருமணத்தை தள்ளிப் போட வேண்டியதாகிவிட்டது.
 
இந்நிலையில் இன்று திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்