வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

Mahendran

திங்கள், 26 மே 2025 (17:05 IST)
பாகிஸ்தான் ராணுவ தலைவருக்கு அந்நாட்டின் பிரதமர், சீனாவில் நடந்த போர் ஒத்திகையின் போது எடுத்த புகைப்படத்தை போட்டோஷாப் செய்து, இந்தியாவுக்கு எதிரான போரில் சாதனை செய்ததாக கூறி பரிசாக வழங்கி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்ரேஷன் ஆபரேஷன் பன்யான் அல்-மார்சஸ் என்பதை குறிப்பதாக கூறப்படும் புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், ராணுவ தளபதி  முனீர் அவர்களுக்கு கொடுத்தார். ஆனால் இந்த படம் உண்மையில் 2019 ஆம் ஆண்டு சீனா ராணுவ பயிற்சியின்போது எடுக்கப்பட்டது.
 
இந்த புகைப்படத்தை போட்டோஷாப் செய்து, பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுக்கு இந்தியாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்காக கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பாகிஸ்தானை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
 
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், பக்கத்து நாட்டில் நடந்த ராணுவ ஒத்திகை புகைப்படத்தை தங்கள் நாட்டில் நடந்த வெற்றியாக பதிவு செய்து, போட்டோஷாப் செய்து கொடுத்து இருப்பது கேவலமானது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் பெரும் அவமானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்