இந்தியா வல்லரசு நாடாகிறது, நம் நாடு பிச்சை எடுக்கிறது: பாக். எதிர்க்கட்சித் தலைவர் வேதனை

Siva

புதன், 1 மே 2024 (13:01 IST)
இந்தியா ஒரு பக்கம் வல்லரசு நாடாகி கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மௌலானா பஸ்னுர் ரஹ்மான் என்பவர் இந்தியா பாகிஸ்தானை ஒப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அவர் இது குறித்து கூறியதாவது.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால், இன்று இந்தியா வல்லரசாக மாற இலக்கு நிர்ணயித்து கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் திவால் ஆவதை தடுக்க பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.


இந்தியா 2024-25 நிதியாண்டில் 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்  பாகிஸ்தானில் வளர்ச்சியே இல்லை. சில சக்திகள் நம் வளர்ச்சியைத் தடுத்துக்கொண்டிருக்கின்றன. அவைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றன. அரசியல் தலைவர்கள் நாம் பொம்மை போல் இருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. அவற்றால் அரசையும் அமைக்க முடியும்” என்று கூறினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்