சமீபத்தில் ஐநா சபையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பூட்டோவுக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையே நடந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் பிரதமர் மோடி குறித்து பூட்டோ பேசியதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி செய்தியாளர்கள் சந்திப்பில் “பாகிஸ்தானிடமும் அணு ஆயுதம் உள்ளதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணு ஆயுத நிலைபாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. பிரச்சினை என்றால் பின்வாங்க மாட்டோம். இஸ்லாமிய மதத்தை இந்தியா தீவிரவாதத்தோடு சித்தரிக்கிறது” என பேசியுள்ளார்.