இந்தியாவை தோற்கடித்தால் இவ்வளவு சலுகையா? – ஓப்பனாக சொன்ன ரிஸ்வான்!

வியாழன், 15 டிசம்பர் 2022 (10:53 IST)
உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை வென்றதால் தனக்கு கிடைத்த சலுகைகள் குறித்து பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் பேசியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆனால் இந்தியாவை வென்றதால் தனக்கு நல்ல மரியாதை கிடைத்ததாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “2021 உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பிறகு நான் பாகிஸ்தானில் உள்ள எந்த கடைக்கு சென்று எந்த பொருள் வாங்கினாலும் என்னிடம் யாரும் பணமே வாங்கவில்லை. உங்களுக்கு எல்லாமே இலவசம்தான் என்று சொன்னார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு அந்த வெற்றி எவ்வளவு முக்கியம் என என்னால் அப்போதுதான் உணர முடிந்தது” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்