இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தனர்.
சமீபத்தில் நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சும் நவாஸ்ன் காலமானதால் நவாஸ் ஷெரிப், அவரது மகள், மற்றும் மருமகனுக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்க 12 மணி நேர பரோல் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரூ.5 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த உத்தரவிட்டு நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகிய 3 பேரின் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அவர்கள் மூன்று பேரையும் சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது.