இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபர் அசாம் 47 ரன்களும், சோயிப் மாலிக் 43 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்குமார் மற்றும் கேதார் ஜாவித் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்த நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 29 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 52 ரன்களும், தவான் 46 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகள் பெற்றுள்ளது.