புல்வாமா தாக்குதல், பதன்கோட் தாக்குதல், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல், ஜம்மூ காஷ்மீர் சட்டமன்றத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணமான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில் சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்த நிலையில் தொடர் அழுத்தங்களால் சீனா இறங்கி வந்துள்ளது. இதையடுத்து ஐ.நா மே 1 ஆம் தேதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது.