கருத்தரிக்க வாய்ப்பில்லாத தம்பதியரில் கணவரது விந்தணுக்களையும், மனைவியின் கருமுட்டையையும் சோதனை குழாய் மூலம் இணைத்து, கருத்தரிக்க வைத்து, வளர்ச்சிபெற்ற கருவினை அந்தப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தைப்பெற சாத்திய சூழலை உருவாக்கும் முறைதான் டெஸ்ட் டியூப்.
நீண்ட காலம் இதுகுறித்து ஆலோசனையில் இருந்த பாகிஸ்தான் நாட்டில் தற்போது டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோதம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் டியூப் முறை வாடகை தாயை போன்றது இல்லை, தாயின் கடுவிலே செலுத்தக்கூடியது தான். அதனால் இது இஸ்லாமிய நன்முறைகளுக்கு எதிரானது அல்ல, என பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.