பசிபிக் கடலில் எரிமலை வெடிப்பு; அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஞாயிறு, 16 ஜனவரி 2022 (09:12 IST)
பசிபிக் கடலில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால் அமெரிக்காவின் மேற்கு கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவின் அருகே கடலில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹங்கா ஹப்பாய் தீவில் எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீவுப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து மேற்கு கடற்கரை அமெரிக்கா மாகாணங்களான கலிபொர்னியா, ஒரேகான், அலாஸ்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றாலும், கடற்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்