மனிதருக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை! – அமெரிக்காவில் ஆச்சர்யம்!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:43 IST)
அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டாலும் மனித உடல் உறுப்புகளில் குறை ஏற்பட்டால் அதற்கு பதிலாக மற்றொரு நபரின் உறுப்புகள் பொருத்தப்படுவது மருத்துவ உலகில் தொடர்ந்து வருகிறது.

ஆனால் இதயம், சிறுநீரகம் போன்றவற்றிற்கு மாற்று அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டேவின் பென்னர் என்ற நபர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலில் அவரது உடலிற்கு பொருந்தும் இதயம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்து அமெரிக்க மருத்துவத்துறையிடம் அனுமதியும் பெற்றுள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி என்பது அதன் உறுப்புகளை மனித உடல் ஏற்க தடையாக உள்ள மரபணுக்களை நீக்கி, மனித மரபணுக்களை பன்றிக்கு செலுத்தி வளர்ப்பது ஆகும்.

அவ்வாறு பெறப்பட்ட இதயத்தை தற்போது நோயாளிக்கு வெற்றிகரமாக மருத்துவர்கள் பொருத்திய நிலையில் அவர் தற்போது வரை நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக மூளை சாவு அடைந்த நபர் ஒருவருக்கு இதேபோல பன்றியின் சிறுநீரகம் மாற்று சிகிச்சையில் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்