இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் கங்கா..! – 9வது விமானம் புறப்பட்டது!

செவ்வாய், 1 மார்ச் 2022 (08:25 IST)
போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியர்களை மீட்கும் “ஆபரேஷன் கங்கா” திட்டத்தில் 9வது விமானம் இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் கங்கா” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை எட்டு விமானங்கள் மூலமாக பலர் மீட்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து தற்போது ஆபரேஷன் கங்காவின் 9வது விமானம் 218 இந்தியர்களுடன் ருமேனியாவின் புகாரெஸ்டிலிருந்து டெல்லி புறப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உக்ரைனில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்