தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்; 1100ஐ கடந்த பலி எண்ணிக்கை!

திங்கள், 9 அக்டோபர் 2023 (08:50 IST)
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன் தினம் சுமார் 5000 ஏவுகணைகளை வீசி இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து பலரை சுட்டுக்கொன்று, பிணைக்கைதிகளாகவும் பிடித்து சென்றது.

இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பெரும் போர் எழுந்துள்ளது. காசா முனையில் உள்ள மக்களை வெளியேற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் மறைவிடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ஹமாஸ் பிணையக்கைதிகளாக பிடித்து சென்ற இஸ்ரேலியர்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டது.

இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான், அரபு நாடுகளும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இறங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலால் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர்கள் 413 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்