இஸ்ரேல் போர் எதிரொலி: தங்கத்தை அடுத்து கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு..!

திங்கள், 9 அக்டோபர் 2023 (08:07 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போர் காரணமாக தங்கம் விலை உயர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தங்கத்தை அடுத்து தற்போது கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுவதால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக சர்வதேச சண்டையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஐந்து சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89 டாலராக உயர்ந்துள்ளதாகவும் அக்டோபர் 6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த கச்சா எண்ணெய் திடீரென கிட்டத்தட்ட ஐந்து டாலர் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதால்  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதை எடுத்து உடனடியாக இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் தலையிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்