இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று மூன்று வகையாக பரவத் தொடங்கியுள்ளதாக ஒமிக்ரானை ஆய்வு செய்து வரும் இன்சாகோக் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ஒமிக்ரான் பிஏ1, பிஏ2 மற்றும் பிஏ3 என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பிஏ1 வீரியமிக்கதாகவும், வேகமாக பரவுவதாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் பரவலால் டெல்டாவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.