அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டுவிட்டரில் பதிவிட்ட கருத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ராபர்ட் லீ சிலை அகற்றப்பட போவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கண்டித்து வலதுசாரி வெள்ளை இனத்தை சேர்ந்த பிரிவினர் பேரணி நடத்தினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் பேரணி நடத்தினர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்தது. இதுகுறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்தார்.
தற்போது அவரது டூவிட் புதிய சாதனை படைத்துள்ளது. இவரது டூவிட் 30 லட்சம் லைக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படியில் பிறரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.