வடகொரிய அதிபர் சீனாவிற்கு ரகசிய பயணம்?

செவ்வாய், 27 மார்ச் 2018 (15:05 IST)
வடகொரிய அதிபர் கிம் சீனாவிற்கு சென்றுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால் இந்த சந்திப்பின் பின்னணியில் உள்ள ரகசியங்களும் வெளியே வரும்.
 
வடகொரியாவின் அதிபர் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருகை தந்துள்ளதாகவும், இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஆனால், இது குறித்து வடகொரிய தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை கிம்மின் சீன பயணம் உறுதிப்படுத்தப்பட்டால் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிம்மின் முதல் வெளிநாட்டு பயணமாக இதுவாகும். 
 
தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கூட, கிம் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. சீனா, வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா வைத்தது. ஆனால் சீனா இதனை மறுத்தது.
 
ஆனால், இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த திடீர் சந்திப்பின் பின்னணியில் இருக்கும் ரகசியமும் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்