அமெரிக்காவை அலற விடும் வடகொரியா

செவ்வாய், 23 மே 2017 (21:05 IST)
அமெரிக்காவின் எச்சரிக்கையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது.


 

 
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்த தொடங்கியவுடன் அமெரிக்கா மற்றும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது. ஆனால் வடகொரியா அதையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாட்டின் அதிபர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
 
மூன்றாம் உலக போர் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது. தென்கொரியா நாடு தற்போது பெரும் அச்சத்தில் உள்ளது. இதையடுத்து நிறிது நாட்கள் எதுவும் செய்யாமல் இருந்த வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது. இதை தென்கொரியா நாடு தெரிவித்துள்ளது. 
 
மீண்டும் அமெரிக்கா வடகொரியாவிடம் அணு ஆயுத சோதனையை நிறுத்துமாறு வலியுறுத்தியது. ஆனால் வடகொரியா, எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக நாங்கள் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறோம் என அசால்டாக தெரிவித்துள்ளது.
 
இதனால் தென்கொரியா மற்றும் அமெரிக்கா பெரும் அச்சத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்