அபுதாபியில் உருவாகும் முதல் இந்து கோவில்! – கட்டுமான பணிகள் தொடக்கம்!

புதன், 11 நவம்பர் 2020 (08:53 IST)
துபாயின் அபுதாபி பகுதியில் முதன்முறையாக கட்டப்படும் இந்து கோவிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான துபாயின் நகரங்களில் இந்தியாவை சேர்ந்த பலரும் கூட வாழ்ந்து வருகின்றனர். அபுதாபியில் 20%க்கும் அதிகமாக இந்தியாவை சேர்ந்த இந்து மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபுதாபியில் இந்துக்களுக்கான கோவில் ஒன்று கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக இத்தாலியிலிருந்து மார்பிள்களையும், ராஜஸ்தான், குஜராத் பகுதிகளிலிருந்து கற்களையும் கொண்டு வர உள்ளனர். இந்த கோவில் குறிப்பிட்ட கடவுளுக்காக கட்டப்படுவதாக இல்லாமல் இந்து மத பாரம்பரியங்கள், கதைகளை உலகிற்கு சொல்லும் விதமாக கட்டப்பட உள்ளது. இந்திய மரபுப்படி கட்டி, அதன் சுவர்களில் மஹாபாரதம், ராமயணம் இதிகாச காட்சிகளை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் என துபாய் வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சிகளை தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்