மீண்டும் ஒன்றுசேர அழைப்பு விடுத்த வடகொரியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

வியாழன், 25 ஜனவரி 2018 (17:01 IST)
கொரிய தீபகற்கத்தில் அமைதி கிராமம் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் வட மற்றும் தென் கொரியா நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசினர்.

 
இந்த கூட்டத்திற்கு பின் முக்கியமான செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் பங்கேற்க உள்ளது. இதற்காக 100க்கும் அதிகமான வீரர்களை வடகொரியா ஏற்கனவே தென்கொரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. 
 
போர் காரணமாக இரண்டு நாடுகளிலும் தனித்து விடப்பட்ட உறவுகள் மீண்டும் சந்திக்க உள்ளனர். இதற்காக தென்கொரிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையெல்லாம் கடந்து இருநாடுகளும் அரசியல் ரீதியாக ஒன்று சேர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இரு நாடுகள் இடையே நடைபெற்ற சண்டையில் அமெரிக்க போன்ற நாடுகள் குளிர் காய்ந்தன. பெரும்பாலான நாடுகள் தென் கொரியாவிற்கே ஆதரவு தெரிவித்தனர். வட கொரியா தனித்து விடப்பட்டாலும் அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் எழுந்தது.
 
இந்நிலையில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கியுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்