அமெரிக்காவுடன் போர்? 8 லட்சம் பேரை தயார் செய்யும் வடகொரியா!

ஞாயிறு, 19 மார்ச் 2023 (09:01 IST)
கடந்த சில காலமாக தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா, அமெரிக்காவை எதிர்க்க 8 லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த பல காலமாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா அதிகப்படுத்தியுள்ளது. அவ்வாறாக சோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் சில தென்கொரியா, ஜப்பான் கடல் பகுதிகளில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் போர் மூளலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இதற்காக வடகொரியாவும் தயாராகி வருவதாக தெரிகிறது. இதற்காக ராணுவ பலத்தை அதிகரிக்க வடகொரியா கட்டாய ராணுவ ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவுடனான போரை எதிர்கொள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் என 8 லட்சம் பேர் ராணுவத்தை எதிர்கொள்ள ஆர்வமுடன் உள்ளதாக வடகொரியா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஜப்பான் கடல் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது வடகொரியா.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்