ராஜ பக்‌ஷேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம் !

புதன், 14 நவம்பர் 2018 (13:02 IST)
இலங்கையில் சில நாட்களாகவே அரசியல் குழப்பம் நீடித்து வருகிற நிலையில் இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்‌ஷே வெளிநடப்பு செய்ததை அடுத்து அங்கு சிறிதுநேரம் கூச்சல் குழப்பம் நேரிட்டது.   எனவே அவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக  சபாநாயகர் அறித்தார்.
அதிபர் சிறிசேனா முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவு கொடுத்து வந்த நிலையில் தற்போதைய பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கே தான் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும், தான் இலங்கையின் பிரதம எனவும் கூறியிருந்தார்.
 
ஆனால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட  ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
 
இதனால் ராஜபக்‌ஷே அவையில் இருந்து திடீரென வெளியில் கிளம்பி சென்றார். இதனால் அவையில் குழ்ப்பம் நீடித்தது.
 
ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவாளர்கள்  அவைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
 
எதிர்கட்சி  உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக மாறினர். இதனால் ராஜபக்‌ஷேவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அவையில் கூச்சல் ஏற்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக சபாநயகர் கரு ஜெயக்குமார் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்